Monday, June 4, 2012

எஸ்.எஸ்.எல்.சி.முடிவுகள் அதிரையில் மாணவிகளே முதலிடம்

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் இன்று பகல் 1:30 மணிக்கு வெளியானது. இத்தேர்ச்சியில் பெண்களே மீண்டும் சாதித்துள்ளனர்.

கா.மு.பெண்கள் மேல்நிலைப் பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி

இமாம் ஷாஃபி மேல்நிலைப் பள்ளி 93 சதவீதம் தேர்ச்சி

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 83 சதவீதம் தேர்ச்சி

இமாம் ஷாஃபி மேல்நிலைப் பள்ளியில் பெண்கள் பிரிவில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

அதிரை அளவில் முதல் மூன்று இடங்கள் பெற்றவர்கள்:


முதலிடம்


ஃபாய்ஜா :467/500 இமாம் ஷாஃபி மேல்.பள்ளி

இரண்டாமிடம்

நவ்ரீன்:462/500 கா.மு.பெண்கள் மேல்நிலைப் பள்ளி

மூன்றாமிடத்தை இருவர் பெற்றுள்ளனர்

சமீரா:461/500 இமாம் ஷாஃபி  மேல். பள்ளி

ஆஃப்ரீன்: 461/500 காதிர் முகைதீன் பெ. மேல் நிலைப் பள்ளி


தருண் குமார் : 454/500  காதிர் முகைதீன் ஆண்கள். மேல் நிலைப் பள்ளி



குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி?



குழந்தையோடு பேசுகிறீர்களா ?

உங்கள் குழந்தையின் பாதுகாப்புக்கு முதல் தேவை என்ன தெரியுமா ? உங்களிடம் உங்கள் குழந்தை பாதுகாப்பை உணர்வது தான். “என்ன பிரச்சினைன்னாலும் உம்மா பாத்துப்பாங்க, வாப்பா பாத்துப்பாங்க” எனும் ஆழமான நம்பிக்கை குழந்தைகளுக்கு இருக்க வேண்டியது அவசியம்.

அதுக்கு முதல் தேவை குழந்தைங்க கூட போதுமான அளவு நேரம் செலவிடறது ! குழந்தைகளோட மனநிலை எப்படி இருக்கு ? அவர்களுடைய நாள் எப்படிப் போச்சு ? அவர்கள் என்ன பண்ணினாங்க ? போன்ற எல்லா விஷயங்களையும் அன்புடன் கேட்டறியுங்கள். அவர்களுக்கு ஒரு நல்ல ஆறுதல் தோளாக இருக்க வேண்டியது அவசியம்.

குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள், பதின் வயதுப் பிள்ளைகளிடமெல்லாம் அதிக நேரம் உரையாடலில் செலவிடுங்கள். அவர்களுடைய வழிகளைச் செம்மைப் படுத்தவும், அச்சுறுத்தல்கள் பற்றி அவர்கள் அறிந்து கொள்ளவும் உங்கள் உரையாடல் உதவ வேண்டும். அவர்களுடைய பயங்கள், கவலைகள் எல்லாம் உங்களுக்குத் தெளிவாகத் தெரிய வேண்டும்.

“இதெல்லாம் நான் எப்படி உம்மா கிட்டே சொல்வது” என குழந்தை நினைக்கக் கூடாது. “எதுவா இருந்தாலும்  உம்மா கிட்டே சொல்வேன்” என குழந்தை நினைக்குமளவுக்கு இயல்பாகப் பழகுங்கள்.

பள்ளி செல்லும் போது வாகனங்கள் எச்சரிக்கை !

பள்ளிக்கூடத்திற்குக் குழந்தைகள் நடந்து போகிறதென வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளோடு சிறிது நாட்கள் நீங்களும் கூடவே நடந்து செல்லுங்கள். சாலையில் எப்படி நடப்பது, எங்கெங்கே கவனமாக இருப்பது போன்ற விஷயங்களைச் சொல்லிக் கொடுங்கள். எந்த இடம் பாதுகாப்பானது, யாரிடம் உதவி கேட்கலாம் போன்ற விஷயங்களையும் அவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

நம்மூர் பள்ளி வாகனங்கள் தெருவழியே செல்வது மிகவும் ஆபத்தானது, எதோ அவர்கள் பைபாஸ் வழியே போவது போன்றொரு உணர்வு அதில் ஏற்படும்  புழுதிகாற்று அவ்வழியே செல்லும் அனைவருக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது என்பது உண்மையே, இதை அந்தந்த பள்ளிகள்தான் வாகன ஓட்டிகளை கவனம் கொள்ளவேண்டியது மிக அவசியமான ஒன்று!

ஒருவேளை பொது வாகனங்களில் பயணிக்கும் குழந்தையெனில் ஸ்கூல் பஸ் ஸ்டாப்பில் போய் குழந்தைக்கு எந்த ஸ்கூல் பஸ், எங்கே ஏறுவது, எங்கே இறங்குவது, எப்படி ஏறி இறங்குவது போன்ற விஷயங்களை பழக்குங்கள். பஸ்பயணத்தில் அச்சுறுத்தலெனில் ஓட்டுநரை அணுக குழந்தைக்குச் சொல்லிக் கொடுங்கள்.

பயணத்தின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும், பாதுகாப்பு விஷயங்கள் என்னென்ன தெரிந்திருக்க வேண்டும் போன்றவையெல்லாம் குழந்தைகள் அறிந்து வைத்திருப்பது அவசியமானது !

தெரியாத நபர் “லிஃப்ட்” கொடுத்தால் மறுக்கப் பழக்குங்கள். ஒவ்வொரு முறையும் உங்களிடம் அனுமதி வாங்கச் சொல்லுங்கள் !

குழந்தைகள் பயணிக்கையில் எப்போதும் ஒன்றிரண்டு பேராய் நடப்பது, பஸ்ஸில் பயணிப்பது பாதுகாப்பானது. தனியே எங்கே செல்வதாக இருந்தாலும் உங்களுக்குத் தகவல் தெரிய வேண்டும் என்பது பால பாடம்.

வாகனங்கள் குழந்தைகளின் மிகப்பெரிய எதிரிகள். அதுவும் சென்னை போன்ற நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் பத்து மடங்கு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இரண்டு விதமான ஆபத்துகள் வாகன விஷயத்தில் உண்டு.

ஒன்று விபத்து. நிறுத்தப் பட்டிருக்கும் வாகனங்களின் பின்னாலோ, பக்கவாட்டிலோ குழந்தைகள் போகாமல் இருக்க வேண்டும். குறிப்பாக வாகன டயரின் அருகே நின்று பேசுவது போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும். வாகனங்கள் வரும் சாலையில் குழந்தைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுங்கள்.

இரண்டாவது கடத்தல் ! குழந்தைகள் கடத்துபவர்கள் வாகனங்களையே பயன்படுத்துகிறார்கள். குழந்தைகளை வசீகரிக்கும் விதமாக சாக்லேட், பொம்மை போன்ற ஏதாவது பொருளைக் காட்டி அவர்கள் காரின் அருகே வந்ததும் சுருட்டிக் கொண்டு பறந்து விடுவது அவர்களுடைய பாப்புலர் திட்டம்.

தெரியாத நபர் இருக்கும் காரின் அருகே எக்காரணம் கொண்டும் போகவேண்டாம் என குழந்தைகளைப் பழக்குங்கள் !

போன் நம்பர் தெரியுமா ?

உங்க போன் நம்பர் உங்க குழந்தைக்குத் தெரியுமா ? தெரியாவிட்டால் முதலில் அதைச் சொல்லிக் கொடுங்கள். குட்டிப் பிள்ளைகள் கூட ஒரு போன் நம்பரை எளிதில் கற்றுக் கொள்வார்கள். பள்ளி செல்லத் துவங்கிவிட்டால், வீட்டு விலாசத்தையும் கூடவே சொல்லிக் கொடுங்கள்.

வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் சில முக்கிய அடையாளங்களையும் குழந்தைக்குச் சொல்லிக் கொடுங்கள். அவ்வப்போது வீட்டில் விளையாட்டாக குழந்தையிடம் விளையாடி போன் நம்பர், விலாசம் எல்லாம் கேட்டு பழக்கப்படுத்துங்கள்.

விளையாட்டாய் பழகும் விஷயங்கள் குழந்தையின் மனதில் எளிதில் பதியும் என்பது குழந்தை உளவியல் !

கையில் நம்பர்

குழந்தைகளின் கையில் போன் நம்பரை எளிதில் அழியாத பேனாவைக் கொண்டு எழுதி வைக்கலாம். வெளியிடங்களில் ஒருவேளை குழந்தை தவறிப் போனால் தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும் என்பது சிலருடைய கருத்து. குறிப்பாக பேசத் தெரியாத குழந்தைகள் விஷயத்தில் இது ரொம்ப பயன் தரும். ஒரு வேளை குழந்தை பதட்டத்தில் எண்ணை மறந்து விட்டால் கூட இது உதவும் !

வெளியூரில் போய் ஏதாவது ஷாப்பிங், தீம்பார்க் போன்ற இடங்களுக்குப் போனால், எக்காரணம் கொண்டும் அந்த இடங்களை விட்டு வெளியே வரவேண்டாம் என சொல்லுங்கள். வெளியே வந்தால் ஆபத்து அதிகமேயன்றி குறைவில்லை ! குழந்தை குட்டிகளுடன் நிற்கும் ஏதேனும் உம்மாக்களிடம் சென்று உதவி கேட்பது ரொம்ப நல்ல விஷயம் என்பதையும் சொல்லிக் கொடுங்கள் !

உடல் நலம் கவனம்

பொது இடங்களுக்குப் போகும் போது குழந்தைகளின் உடல் நலத்தையும் கவனத்தில் கொள்ளுங்கள். தண்ணீர் விளையாட்டெனில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா துணி மணிகள் கைவசம் இருக்கட்டும். வெயில் எனில் குடை தொப்பி போன்றவை நிச்சயம் தேவை.

தண்ணீர் எப்போதும் கையில் இருக்கட்டும். அடிக்கடி தண்ணீர் குடிப்பது சுற்றுலா, ஷாப்பிங், பார்க் போன்ற இடங்களில் ரொம்ப அவசியம். உடலில் தண்ணீர் பற்றாக்குறை  நிலை வந்தால் சோர்வும், நோய்களும் வந்து விடும்.

குழந்தைகள் பெரும்பாலும் “தண்ணீர் கொடுங்கள்” என்று கேட்பதில்லை. எனவே பெரியவர்கள் தான் அதைக் கவனித்து அடிக்கடி தண்ணீர் கொடுக்க வேண்டும்.

நல்ல வசதியான செருப்பை அணிவது அவசியம். சிம்பிளாக காலை உறுத்தாத செருப்புகள் சிறப்பானவை. அதே போல நல்ல வசதியான ஆடைகள் அணிவியுங்கள். ஸ்டைலாக இருப்பதை விட வசதியாக இருப்பதே அதிக மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் என்பது மனதில் இருக்கட்டும் !

எங்கே இருக்காங்க குழந்தைகள் ?

உங்க குழந்தைங்க விளையாடப் போவதிலோ, நண்பர்களுடன் வெளியே போவதிலோ தவறில்லை. ஆனால் குழந்தைகள் எங்கே இருக்கிறார்கள் ? யாருடன் இருக்கிறார்கள் போன்ற விஷயங்களையெல்லாம் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்

“வெளியே போறேன்னு சொன்னான், எங்கே போனான், யார் கூட போனான்னு தெரியலையே” என புலம்பும் நிலையை வைத்துக் கொள்ளாதீர்கள். பக்கத்து தெருவுக்குப் போனால் கூட சொல்லி விட்டுப் போகும் பழக்கத்தைக் குழந்தைகளுக்கு ஊட்டுங்கள்.

கொஞ்சம் பெரிய பிள்ளைகளெனில் (ஆணாக இருந்தாலும் சரி) அவர்களுடன் செல் போன் தொடர்பில் இருங்கள். அவர்கள் பாதுகாப்பற்ற இடத்தில் இருப்பதாய் தோன்றினால் கவனத்தை அதிகப்படுத்துங்கள்.

புதிதாக பள்ளிச்செல்லும் இலமொட்டுகளுக்கு என்னுடைய வாழ்த்தும்...துவாவும்


-அதிரை தென்றல் (Irfan CMP)

நல்ல தமிழ் எழுதுவோம் – 16 – திசைமொழி கலப்பு


திசைச் சொற்கள் தமிழ் மொழியில் வந்து கலந்து, தமிழை வளப்படுத்தின என்று சொல்ல முடியாது. எனினும், அவை பாமர மக்களின் வழக்குச் சொற்களாகப் பயன்படுத்தப் பட்டும், வீட்டு மொழி ஒன்றாகவும் வெளி மொழி தமிழாகவும் பயன்படுத்தும் (தெலுங்கர், மலையாளிகள், தக்னிகள் போன்ற) மக்களின் சமூகப் பிணைப்பினால், அவற்றின் தாக்கம் தமிழில் வந்துவிட்டிருப்பது கண்கூடாகும்.
வடமொழி, அரபி அல்லாத பிறமொழிச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டிருப்பதைச் சுருக்கமாக இனிப் பார்ப்போம்:
வழங்குசொல்
திசைமொழி
நேரான தமிழ்ச் சொல்
அப்பட்டம்
தெலுங்கு
கலப்பில்லாதது
ஆஸ்தி
,,
செல்வம்
எக்கச்சக்கம்
,,
மிகுதி
ஏடாகூடம்
,,
ஒழுங்கின்மை
ஏராளம்
,,
மிகுதி
ஒய்யாரம்
,,                            
குலுக்கு நடை
கச்சிதம்
,,
ஒழுங்கு
கெட்டி
,,
உறுதி
கேப்பை
,,
கேழ்வரகு
சந்தடி
,,
இரைச்சல்
சரக்கு
,,
வணிகப் பொருள்
சாகுபடி
,,
பயிரிடல்
சொகுசு
,,
நேர்த்தி
சொச்சம்
,,
மிச்சம் / மீதம்
சொந்தம்
,,
உரிமை
சோலி
,,
வேலை
தாராளம்
,,
மிகுதி
தாறுமாறு
,,
ஒழுங்கின்மை
துரை
,,
பெரியோன்
தெம்பு
,,
ஊக்கம்
தெம்மாடி
,,
அறிவற்றவன்
தொந்தரவு
,,
தொல்லை
நிம்மதி
,,
கவலையின்மை
பண்டிகை
,,
பெருநாள்
பந்தயம்
,,
பணயம்
மச்சு
,,
மேல் தளம்
மடங்கு
,,
அளவு
வாடகை
,,
குடிக்கூலி
வாடிக்கை
,,
வழக்கம்
விக்கிரயம்
,,
விற்பனை
ரீதி
,,
ஒழுங்கு
வேடிக்கை
,,
காட்சி
எச்சரிக்கை
,,
விழிப்புணர்வு
அக்கடா
கன்னடம்
வாளா
கோசரம்
,,
(அதற்)காக
அக்கறை
,,
கவனம்

அடுத்து, பாரசீக மொழி (ஃபார்ஸி) யின் தாக்கம் தமிழ் மொழியில் எந்த அளவு சேர்ந்துள்ளது என்பது பற்றிப் பார்ப்போம், இன்ஷா அல்லாஹ்.

- அதிரை அஹ்மது

இன்னும் சிறிது நேரத்தில் எஸ்.எஸ்.எல்.சி முடிவுகள்


கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் பிற்பகல் 1:30 மணிக்கு கீழ்காணும் தளங்களில் பார்க்கலாம்

http://tnresults.nic.in/
http://www.dinamalar.com/
http://tnresults.puthiyathalaimurai.tv/
http://dinakaran.com/
http://result.dinakaran.com

Sunday, June 3, 2012

ஆஸ்திரேலியாவில் தாஜுல் இஸ்லாம் சங்கம்.


அஸ்ஸலாமு அலைக்கும்.

03 .06 .2012 அன்று முஹம்மது மீராசாஹிப் அவர்களின் தலைமையில் சிட்னி நகரில் D  நிஜாமுதீன்  அவர்களின் இல்லத்தில் தாஜுல்இஸ்லாம் சங்க முஹல்லாவாசிகளின் கூட்டம் அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் சார்பாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கீழ்க்கண்ட நபர்கள் நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கபட்டனர்..

தலைவர் : S.P.புஹாரி

பொருளாளர் : .சிராஜுதீன் (கீழத்தெரு)

செயலாளர்: D.நிசாமுதீன்

 இந்தக் கூட்டத்தின் கீழ்க்கண்ட நபர்கள் கலந்து கொண்டனர்.

1) முகம்மது மீராசாஹிப்
2) S.P.புஹாரி
3)யாசின்
4)பெரோஸ்
5)காதர்
6) சிராஜுதீன்
7)நிசாம்
8)பைசல்
9) ரிஜ்வான்
10) ஜமீல்
11)பெரோஸ்
12)சலீம்
13)ஆரிப்
14)காதர் முஹைதீன்

- அதிரை இஸ்ஹாக்

அதிரை எக்ஸ்பிரஸ் கல்வி விருது 2012 வழங்கும் விழா


அஸ்ஸலாமு அலைக்கும்

7/06/2012 வியாழக்கிழமை மாலை 4:30 மணியளவில், ஹஜரத் பிலால் நகர், அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் 6-வது கூட்டத்தில், 12-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பில், அதிரை சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் பயின்று, அதிரை அளவில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ/மாணவிகளுக்கு பரிசுத்தொகைகள் மற்றும் கேடயங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதுசமயம் நிகழ்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

பரிசு பெறும் மாணவ/மாணவியர்

பன்னிரெண்டாம் வகுப்பு :
முதல் பரிசு :
பெயர் : மாணவி எம். ஆஃப்ரீன் பானு,
மதிப்பெண்கள் : 1160 / 1200
பரிசுத்தொகை : ரூ 5000 /-
பரிசுத்தொகையை வழங்கியவர் : “கவியன்பன்” அபுல் கலாம் – அபுதாபி

இரண்டாம் பரிசு :
பெயர் : எம்.ரிஹானா.
மதிப்பெண்கள் : 1147 / 1200
பரிசுத்தொகை : ரூ 3000 /-
பரிசுத்தொகையை வழங்கியவர் : அய்டா (AYDA) – ஜித்தா – சவூதி அரேபியா

மூன்றாம் பரிசு :
பெயர் : ஜாஃப்ரின்
மதிப்பெண்கள் : 1137 / 1200
பரிசுத்தொகை : ரூ 2000 /-
பரிசுத்தொகையை வழங்கியவர் : ஜஃபருல்லாஹ்/உபயதுல்லாஹ்

பத்தாம் வகுப்பு :
முதல் பரிசு : ரூ 3000 /-
பரிசுத்தொகையை வழங்கியவர் : M.நிஜாமுதீன் ( சேக்கனா M. நிஜாம் )

இரண்டாம் பரிசு : ரூ 2000 /-
பரிசுத்தொகையை வழங்கியவர் : அய்டா (AYDA) – ஜித்தா – சவூதி அரேபியா

மூன்றாம் பரிசு : ரூ 1000 /-
பரிசுத்தொகையை வழங்கியவர் : "கணினி தமிழ் அறிஞர்" ஜமீல் M. ஸாலிஹ்


சிறப்பு பரிசுகள் :

இஃபாத் ரஹ்மான்
முதலிடம் கா.மு. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 1048/1200

எஸ் ஃபாத்திமா 
முதலிலிடம் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 1027/1200


மதறஸா மாணாக்கர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்ஷா அல்லாஹ் வரும்  ஷஃபான் மாதம் வெளியாகின்றன. அதில் முதல் மூன்று இடங்களைப்பெறும் மாணாக்கர்களுக்கு பரிசுகளும், விருதுகளும் வழங்கப்படும். விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

நமதூர் சிறுபான்மை கல்வி நிலையங்களில் பயிலும் மாணாக்கர்களின் கல்வி ஆர்வத்தை வளர்க்கவும்,2012-15 ஆம் கல்வி ஆண்டுகளுக்குள் மாநில / மாவட்ட அளவில் சாதனை படைக்கும் மாணாக்கர்களை உருவாக்கவும் அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்கள் சார்பில் இந்த பரிசுகளும் விருதுகளும் வழங்கப்படுகின்றன. கல்வியார்வலர்களின் தொடர் ஊக்கமளிப்பைப் பொருத்து வரும் கல்வியாண்டுகளில் பரிசுத்தொகைளை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

கல்வியார்வத்தை ஊக்குவிக்கும் இந்த சிறிய முயற்சிக்கு அதிரை எக்ஸ்பிரஸ் தொடர்ந்த ஆதரவை வழங்கி, நமது எதிர்காலத் தலைமுறை கல்வியில் சிறந்தவர்களாக விளங்க ஊக்கமளிக்கும்படி வேண்டுவதோடு, எங்களின் இந்த முயற்சிக்கு ஆதரவாக பரிசு வழங்கிய கல்வியார்வளர்களுக்கும், அய்டா ஜித்தா அமைப்பினருக்கும் மேலுன் அதிரை தன்னார்வலர்களுக்கும்,அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் தலைமை நிர்வாகிகளுக்கும் அதிரை எக்ஸ்பிரஸ் குழு நன்றி கலந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.


பத்தாம் வகுப்பில் பரிசு பெறும் மாணவ/மாணவியரின் பெயர்கள் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப் படும்.

மரண அறிவிப்பு


அஸ்ஸலாமு அலைக்கும்,

நமதூர் கடற்கரைதெரு மர்ஹூம் மு.செ.அ.முஹம்மது ஷரீஃப் (தேங்காய்பால் வகையறா) அவர்களின் இரண்டாவது மகனும், ஹாஜி. உமர் தம்பி (Retd. Sub-Registrar, Co-Operative Banks, Tamil Nadu Govt) மற்றும் ஹாஜி.ஹாஜா முஹைதீன் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் ஹாஜி O.K.M.நெய்னா முஹம்மது, மர்ஹூம் V.A. காதர் ஆகியோரின் மைத்துனரும், ஹாஜா ஷரீஃப் இன் தகப்பனாருமாகிய S. நெய்னா முஹம்மது அவர்கள் நேற்று (ஜூன் 2, 2012) சனிக்கிழமை மலேசியாவில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரது மஃபிரதுக்காகவும், குடும்பத்தினருக்கு இப்பேரிழப்பை தாங்கும் மன சக்தியையும் வழங்கவும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆச் செய்வோமாக. ஆமின்

தகவல் : O.K.M.N.Fathhuddeen

மரண அறிவிப்பு (சபுருன் ஜமீலா)

நடுத்தெருகீழ்புறம் மர்ஹும் முகமது ஹுசைன் அவர்களுடைய மகளும் ஜமால் அவர்களின் சகோதரியும் கோனா ஆலிம்சா அவர்களின் மருமகளும் நெய்னாதம்பி அவர்களின் மனைவியும் அஹமது ஹசனின் தாயாருமான சபுருன் ஜமீலா அவர்கள் இன்று காலை வஃ பாத்தாகி விட்டார்கள் (இன்னா...)

அன்னாரின் ஜனாசா இன்று இரவு 8:30மணிக்கு மறைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் .
தொடர்புக்கு :+91 9791711272

"அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்; பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமேயில்லை” எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும்."--அல் குர்ஆன்.

Saturday, June 2, 2012

அதிரை மஸ்ஜிதுத் தவ்ஹீத் ஜும்ஆ பயான்

அதிரை மஸ்ஜிதுத் தவ்ஹீத் ஜும்ஆ பயான்

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்!

ஏழைஎளிய நடுத்தர மக்களை பாதிக்கும் மத்திய அரசின் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நேற்று பட்டுகோட்டை தலைமை தபால் நிலையம் எதிரில்  SDPI நடத்திய கண்டன ஆர்ப்பாட்டதில் பலதரபட்ட பொதுமக்களகலந்து கொண்டனர். 


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு SDPIன் மாவட்டத்தலைவர் M.ஆசாத் அவர்கள் தலைமை ஏற்க SDPI யின் மாவட்ட செயலாளர் Z.முஹம்மது இலியாஸ் அவர்கள் முன்னிலையில். SDPIன் திருச்சி மாவட்ட துணைத் தலைவர் S.சம்சுதீன் அவர்கள் கண்டன உரையாறினார். 


இதில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பினர். முன்னதாக SDPIன் பட்டுக்கோட்டை நகர அமைப்பாளர் M. அமானுல்லாஹ் வரவேற்புரையாற்றினார். இறுதியாக அதிரை SDPIன் நகர செயலாளர் S.முஹம்மது அவர்கள் நன்றியுரையாற்றினார்.

Friday, June 1, 2012

மீண்டு(ம்) வந்தோம்!

நுரையீரல் நிபுணர் Dr. அப்துல் சமது-திருச்சி ,மற்றும் இருதய நிபுணர்

Dr .முருகேசன்-தஞ்சை அவர்களின் பரிந்துரை பேரில் இறையருளால்
   
சிகிச்சை முடிந்து நல்லபடியாக மீண்டும் ஜித்தா வந்து சேர்ந்தேன்!


எமக்காக துஆ செய்த எல்லா நல்ல உள்ளங்களுக்கும், அஞ்சல் மற்றும்

தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்த அனைத்து

நல்லிதயங்களுக்கும் நன்றிக் கடமைப்பட்டிருக்கிறேன். jazaakkallaah! 



--
Rafia
with Regards.

“விழிப்புணர்வு” பக்கங்கள் புத்தகம் வெளியீடு அறிவிப்பு !


அஸ்ஸலாமு அலைக்கும்! (வரஹ்) 

எல்லாப் புகழும் இறைவனுக்கே !

நமது சமுதாயம் சார்ந்த பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, விழிப்புணர்வைத் தூண்டும் விதமாக அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் கட்டுரைகளை எளிய வடிவில் அமைத்து, நமதூரைச் சார்ந்த சகோதரர்களின் இணையதளம் மற்றும் வலைப்பூக்கள் போன்றவற்றில் பதிந்துவருகின்றவற்றில் கீழ்க்கண்ட கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து, 'விழிப்புணர்வு பக்கங்கள்' என்ற பெயரில் என் முதல் நூலாக வெளியிட ஏற்பாடு செய்துள்ளேன். (இன்ஷா அல்லாஹ் ! )




1. சீட்டுக் கட்டு ராஜா !
2. ரேஷன் கடைகளில் முறைகேடா ?
3. லஞ்சமா ?
4. கலெக்டரிடம் புகார் செய்ய !
5. தகவல் அறியும் உரிமைச் சட்டம்
6. கவனம்: நிலம் வாங்கும் முன் !
7. பேரூராட்சி மேற்கொள்ள வேண்டிய பணிகள் ?
8. கொசு(த்) தொல்லையிலிருந்து விடுபட...
9. கலப்படம் – ஓர் எச்சரிக்கை !
10. சிட்டுக் குருவியைக் காணவில்லை !
11. வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு !
12. வேலைவாய்ப்பு ! ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி ?
13. V.A.O. வின் பணிகள் யாவை ?
14. புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி ?
15. தண்ணீர் சேமிப்பீர் !
16. அதிரைக் கடல் !
17. குடிக்காதே !
18. அதிரையின் விருந்து உபசரிப்புகள் !
19. மந்திரவாதி !
20. TEEN AGE – பருவம் !
21. கள்ளக் காதல் !
22. மரணத்தின் நிரலாக.....!
23. பயண அனுபவங்கள் 

1. எனக்கு ஊக்கம் கொடுத்து, நல்ல பல ஆக்கங்களைப் பெறும் விதமாகப் பின்னூட்டமிட்டும், நேரிலும், மின்னஞ்சல், தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு அன்பைக் காட்டிய உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வாழும் நண்பர்கள், உறவினர்கள், சகோதர சகோதரிகள் மற்றும் சகப் பதிவர்கள் என அனைவருக்கும் எனது வாழ்த்துகளை அன்புடன் அறிவித்தவனாக..................

2. பல வேலைகளுக்கிடயே எனக்காக நேரத்தை ஒதுக்கி, இந்நூலில் உள்ள எழுத்துப் பிழைகளைச் சரிசெய்து தந்ததோடு, நல்ல ஆலோசனைகளை வழங்கிய மூத்த சகோ. அதிரை அஹமது அவர்களுக்கும், எனக்கு ஊக்கம் கொடுத்ததோடு, நல்ல பல ஆலோசனைகளை வழங்கிய மூத்த சகோ. ஜமீல் M.ஸாலிஹ், மற்றும் வலைத் தள நிர்வாகிகள், சக பதிவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகளை அன்புடன் அறிவித்தவனாக..................

3. மேலும் எண்ணற்ற வலைத் தள நண்பர்களை உருவாக்கித் தந்து, எழுத்து மற்றும் எழுத்து சார்ந்த நல்ல பல விசயங்களை நான் மேலும் கற்றுக்கொள்ள நல்ல அடித்தளமாக அமைத்துக் கொடுத்த நமது அதிரைச் சகோதரர்களின் வலைத்தளங்கள் மட்டுமே என்றால் மிகையாகாது ! நாம் அதிகமாகப் பேசாவிட்டாலும் நமது எழுத்துகள் கண்டிப்பாக அடுத்தவர்களை விழிப்புணர்வு பெறவைக்கும் (இன்ஷா அல்லாஹ்!) என்ற நம்பிக்கையில்................... 

4. இது ஒரு இலவச வெளியீடாகும். எனது சொந்தச் செலவில் முதல் பதிப்பாக ஆயிரம் பிரதிகள் அச்சிடுவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளேன் என்பதையும்...............

5. இந்நூலை நமதூரிலும் வெளிநாடுகளில் உள்ள நமது சமுதாயம் சார்ந்த பொது அமைப்புகளிடமும் வழங்கி, வெளியிட ஏற்பாடு செய்து, அதன் மூலம் கிடைக்கப்பெறுகிற நிதியை அந்தந்தப் பொது அமைப்பின் சமுதாயச் சேவைகளுக்கென்று பயன்படுத்திக்கொள்ளக் கேட்டுக்கொள்ளலாம் என எண்ணியுள்ளேன். இதற்காகத் தங்களின் மேலான கருத்துகள் – ஆலோசனைகளை எதிர்பார்த்தவனாக.............       

6. மேலும் நமது இணையதள வாசகர்கள் படிப்பதற்கு இலகுவாக நமது சகோதர வலைத் தளங்களில் "நூல் வடிவில்" (E-BOOK) பதிவேற்றம் செய்யப்படும் (இன்ஷா அல்லாஹ்!) என்பதையும்…………

7. இப்புத்தகம் மூலமாக நீங்கள் பெறப்போகும் பயனை உங்கள் மூலமாகப் பலரும் இலவசமாகப்  பெறுவதற்கு நீங்கள் மறுபதிப்பு செய்து வெளியிட எனக்கு முழு சம்மதம் என்பதையும்…………..

8. இப்புத்தகத்தின் பாகங்கள் ஒன்று இரண்டாகி, மூன்று நான்காகி........என சக பதிவர்களின் சமுதாய விழிப்புணர்வு கட்டுரைகள் பங்களிப்புடன் தொடர வேண்டும் என்பதையும்...............  

இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். 

அன்புடன்,
சேக்கனா M. நிஜாம் 
shakkananijam@gmail.com                                                                                                                                      

Thursday, May 31, 2012

U.A.E – ல் வசிக்கிறீர்களா ?


UAE - ல் வசிக்கும் NRI இந்தியரா நீங்கள் ?


முதலில் http://uaeindians.org/registration.aspx என்ற வலைத்தளத்திற்கு சென்று உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினர் பெயர்களை பதிந்துகொள்ளவும். இதனால் எதிர்காலத்தில் நீங்கள் வசிக்கும் நாட்டில் பிரச்சனைகள் ஏற்பட்டால் எளிதாக இந்திய தூதரகத்தை உங்களால் அணுக முடியும். இதை UAE -ல் உள்ள இந்திய தூதரகம் இந்த வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

மேலும் UAE - ல் வசிக்கும் இந்திய தொழிலாளர்களுக்கான தமிழ் வழிகாட்டிக்கு
இச்சுட்டியை சொடுக்கவும்

ப்ளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கல் துவக்கம்

கடந்த மார்ச் மாதம் தேர்வு எழுதிய ப்ளஸ் டூ மாணவர்களுக்கு  மே மாதம் 22  ஆம்  தேதி முடிவுகள் வெளியானது, இந்நிலையில் மே 30 ஆம் தேதி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப் படும் என அரசு தேர்வுத்துறை அறிவித்திருந்தது.

ஆனால் நமதூர் கல்வி நிறுவனங்கள் தஞ்சாவூரில் சென்று மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று வருவதில் கால தாமதம் ஏற்பட்டதால், இன்று காலை முதலே  மதிப்பெண் சான்றிதழ்களும், மாற்றுச்சன்றிதழ்களும், அந்தந்த பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு வழங்கப் பட்டது  .

இம்முறை, மதிப்பெண் சான்றிதழ்களில், மாணவர்களின் புகைப்படம் மற்றும் QR எனப்படும் கணினி குறியீடும் காணப் படுகிறது 

அதிரை எக்ஸ்பிரஸ்

 
"SC"